ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், கொல்கத்தா-குஜராத் அணிகள் இன்று மோதல்…!

Advertisements

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், கொல்கத்தா-குஜராத் அணிகள் இன்று மோதுகின்றன.10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெறும் 39வது லீக் ஆட்டத்தில், ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்கிறது. புள்ளிப்பட்டியலில், குஜராத் அணி 10 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்புடன் குஜராத்தும், வெற்றிப்பாதைக்கு திரும்ப கொல்கத்தாவும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *