புலம்பும் டிரம்ப்! ஹார்வர்ட் பஞ்சாயத்தில் நீதிமன்றம் புது உத்தரவு..!

அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிபராக பதவி ஏற்றது முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். இந்நிலையில் , அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், வெளிநாடுகளிலிருந்து வரும் மாணவர்களுக்கு இனி அட்மிஷன் வழங்க கூடாது என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

வெளிநாட்டு மாணவர்கள் தான் உள்ளூர் பசங்களை கெடுக்கிறார்கள். எனவே நம்மூர் பிள்ளைகளை பாதுகாக்க, வெளிநாட்டு மாணவர்கள் ஹார்வர்டில் படிக்க தடை விதிக்கிறேன் என்று நேற்று டிரம்ப் தடை போட்டார். இதற்கு எதிராக பல்கலைக்கழகம் மேல் முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த தடை உத்தரவை நீதிபதி விமர்சித்தார். மட்டுமல்லாது டிரம்ப்பின் உத்தரவுக்கு தடைவிதித்தும், அதாவது இனி வெளிநாட்டு மாணவர்கள் ஹார்வர்டில் பயில தடையில்லை என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

உலகின் தலைசிறந்த கல்வி நிலையத்தில் ஹார்வர்ட் பல்கலைக்கழமும் ஒன்று. தனியார் கல்வி நிறுவனமான இது, கல்விக்கு மட்டுமல்லாது ஜனநாயக இயக்கங்களுக்கும் பெயர் பெற்றதாக இருந்து வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா சப்போர்ட் செய்து, ஆயுதங்களை கொடுத்தபோது, அதை எதிர்தது பாலஸ்தீனத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள் குரல் கொடுத்தனர். போராட்டங்களும் நடந்தன. இது டிரம்புக்கு கவுரவ குறைச்சலாக இருந்தது.

இஸ்ரேல் மற்றும் அதன் ஆதரவு நாடுகளும், பாலஸ்தீன ஆதரவு போராட்டம் குறித்து அமெரிக்காவை உசுப்பிவிட்டது. இதனையடுத்து ஹார்வர்டில் படிக்கும் மாணவர்கள் வேறு கல்வி நிலையங்களுக்கு போக வேண்டும். ஹார்வர்டில் வெளிநாட்டு மாணவர்களுக்கு இடமில்லை என்று என்று உத்தரவிட்டார். இதற்கு எதிராக நீதிமன்றத்தை பல்கலைக்கழகம் நாடியிருந்தது. டிரம்ப்பின் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், ஹார்வர்ட் மாணவர்கள் அங்கேயே கல்வியை தொடர அனுமதித்தது.இதனையடுத்த இரண்டாவது உத்தரவு போட்டு அதிலும் மூக்கை உடைத்துக்கொண்டிருக்கிறார் டிரம்ப்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *