‘I LOVE WAYANAD’… தேர்தல் பரப்புரையில் – ராகுல் காந்தி!

Advertisements

கேரளா:

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் வருகிற 13-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அங்குக் காங்கிரஸ் கட்சி சார்பில், ஏற்கனவே அந்தத் தொகுதியில் எம்.பியாக இருந்த ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.

அவர், தனது இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தை கடந்த 2-ந்தேதி தொடங்கினார். அவர் வயநாடு தொகுதி முழுவதும் சுற்றுப் பயணம் சென்று வாக்காளர்களை நேரடியாகச் சந்தித்து ஆதரவு திரட்டினார். மேலும் பல பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று பேசினார்.

பிரசாரத்தின்போது அவர் கல்லூரி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். வயநாடு தொகுதியில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடியவுள்ள நிலையில், சுல்தான் பத்தேரி பகுதியில் பிரியங்கா காந்தியுடன் இணைந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, ராகுல் காந்தி தனது டீ-ஷர்ட் பின்புறம் ‘I LOVE WAYANAD’ என்று எழுதியிருந்ததை பார்த்துப் பொதுமக்கள் ஆர்ப்பரித்தனர். இது தொடர்பான வீடியோவைக் கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *