திடீர் உடல்நலக் குறைவு.. அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.!

திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுகவின் மூத்த தலைவராகவும், தற்போதைய தமிழ்நாடு அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராகவும் இருந்து வருபவர் அமைச்சர் துரைமுருகன். அண்மையில், சளித் தொந்தரவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அப்போது அவருக்கு இலாகா மாற்றங்கள் செய்யப்பட்டிருந்த நிலையில், அவரது உடல்நிலை குறித்த செய்திகள் பரவின. தற்போது, மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் இன்று காய்ச்சல் காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் அவரது உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *