S. Jagathrakshakan: 5 நாளாக நடைபெற்ற சோதனை நிறைவு!

ஜெகத்ரட்சகன் எம்.பி. தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 5 நாளாக நடைபெற்ற சோதனை நிறைவு!

சென்னை: சென்னை ஜெகத்ரட்சகன் எம்.பி. தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5 நாளாகச் சோதனை நடத்தி வந்தனர்.அடையாறில் உள்ள அவரது இல்லம், பூந்தமல்லி சவீதா கல்வி குழுமம், புதுச்சேரி பத்துக்கன்னு பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.

இதில் பலகோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மீட்கப்பட்டு அதனை மதிப்பீடு செய்யும் பணியும் நடைபெற்றது. மேலும் பல ஆவணங்களை  வருமான வரித்துறை அதிகாரிகள் கைபற்றிஉள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்  5 நாளாக நடைபெற்ற சோதனை நிறைவுபெற்று வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றபட்ட ஆவணங்கள் மற்றும் பலகோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை எடுத்துச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *