
ஐ.பி.எல். இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் 9 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் 19 ஆவது ஐ.பி.எல். இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் 9 ஆவது போட்டி நடைபெற்றது. போட்டியில், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது.
இதில், மிகவும் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 55 ரன்களும், துருவ் ஜுரேல் 75 ரன்களும் எடுத்து அசத்தினர். இதையடுத்து, 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால், 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.



