
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில், தமிழக அரசியலை அதிரவைக்கும் ஒரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, முந்தைய அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த மேல்முறையீட்டு மனுவை தற்போதைய தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது.”இந்த முடிவை வரவேற்றுள்ள பி.எஸ்.பி மாநிலத் தலைவர் பி. ஆனந்தன், சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து ஒருசில விஷயங்களை முன்வைத்துள்ளார்.. அதில் , ‘ஆம்ஸ்ட்ராங் கொலை என்பது சாதாரண ரவுடி மோதல் அல்ல; இது ஒரு திட்டமிட்ட அரசியல் படுகொலை. முன்னாள் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் ஆவடி நாசர் ஆகியோருக்கு குற்றவாளிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி, அதற்கான புகைப்பட ஆதாரங்களும் வெளியாகின. இந்த விவகாரம் குறித்து சிபிஐ முழுமையாக விசாரிக்க வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தினார்.இதற்கிடையில், சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை.. தற்பொழுது இந்த ஒரு விஷயம் தான் தமிழக அரசியல் களத்தில் தீயாய் பரவிவந்துட்டு இருக்கு..இது குறித்த பின்னணி தகவல்களை தற்பொழுது விரிவாக பார்க்கலாம்.!
முதலில் , இந்த வழக்கின் பின்னணி குறித்து பார்த்து விடலாம்.. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவராக இருந்தவர் தான் ஆம்ஸ்ட்ராங். இவர், கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி சென்னை பெரம்பூர் தொகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் கொலை செய்யப்பட்டது தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அப்போதைய திமுக ஆட்சியில் ஒரு கட்சித் தலைவருக்கு பாதுகாக்க முடியாத நிலை இருப்பதாகவும் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, இச்சம்பவத்தில் தொடர்புடைய 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்தச் சூழலில் தான், ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் புலன் விசாரணையை தமிழ்நாடு காவல்துறை நியாயமாக மேற்கொள்ளவில்லை. எனவே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் புலன்விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் ஆம்ஸ்ட்ராங் சகோதரர் இமானுவேல். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆம்ஸ்ட்ராங் வழக்கை சிபிஐ-க்கு மாற்றியது.
இந்த உத்தரவுக்கு எதிராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தி.மு.க தலைமையிலான தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. அதேவேளையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு ஜாமின் வழங்கப்படுவதாகவும் அவர்கள் வழக்கின் சாட்சியங்களை அழிக்க முற்படுவதாகவும் கூறி ஆர்ம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி உச்சநீதிமன்றத்தில் தனியாக மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள், உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் தமிழக காவல்துறை சிபிஐ-யிடம் ஒப்படைக்கவில்லை.
இந்நிலையில் , ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு வாபஸ் பெற்றதை பகுஜன் சமாஜ் கட்சி வரவேற்றுள்ளது. இது ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கும் தலித் மக்களுக்கும் நீதி கிடைக்கும் முக்கியமான திருப்புமுனை என மாநில தலைவர் பி. ஆனந்தன் தெரிவித்துள்ளார். மேலும், வழக்கில் அரசியல் பின்னணி இருப்பதாகவும், முன்னாள் அமைச்சர்களுடன் குற்றவாளிகளுக்கு தொடர்பு இருந்ததாக பல்வேறு அரசியல் தலைவர்கள் கூறியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் ,சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் பி. ஆனந்தன், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கடந்த ஆட்சியில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தற்போதைய தமிழக அரசு வாபஸ் பெற்றிருப்பதை வரவேற்கத்தக்கது .. இந்த முடிவின் மூலம் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு அமலுக்கு வந்து, வழக்கு சிபிஐ விசாரணைக்கு செல்லும் சூழல் உருவாகியுள்ளதாக அவர் கூறினார். இதற்காக தமிழக முதல்வர் விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை மாயாவதி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதாக ஆனந்தன் கூறினார். ஆனால், முந்தைய திமுக அரசு இந்த வழக்கை மாநில போலீசாரே விசாரிப்பதாகக் கூறி, சிபிஐ விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பலமுறை மேல்முறையீடு செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். தற்போதைய அரசு அந்த மேல்முறையீட்டை வாபஸ் பெற்றிருப்பது, ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் நீதியை உறுதி செய்யும் முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுவதாக அவர் தெரிவித்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை சாதாரண ரவுடி மோதல் அல்ல; அரசியல்பின்னணியுடன் நடந்த திட்டமிட்ட படுகொலை என தொடக்கத்திலிருந்தே தாங்கள் கூறிவந்ததாக ஆனந்தன் தெரிவித்தார். முதலில் எட்டு பேர் மட்டுமே சம்பந்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் 27 பேர் வரை கைது செய்யப்பட்டதாகவும், அதன் மூலம் வழக்கின் பரிமாணம் மாறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வழக்கில் கைது செய்யப்பட்ட சில குற்றவாளிகளுக்கு சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஆவடியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியதாக ஆனந்தன் கூறினார்.
குற்றவாளிகளுடன் அமைச்சர்கள் இருந்ததாக கூறப்படும் புகைப்படங்கள் வெளியாகியபோது பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததாகவும் அவர் தெரிவித்தார். எனினும், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வெளியாகவில்லை. இந்நிலையில் , ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முழுமையான உண்மை வெளிவந்து, சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே பகுஜன் சமாஜ் கட்சியின் நிலைப்பாடு என்றும், சிபிஐ விசாரணை மூலம் உண்மையான குற்றவாளிகள் வெளிச்சத்துக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் பி. ஆனந்தன் தெரிவித்தார்…
இந்நிலையில் , “ஆம்ஸ்ட்ராங் கொலை என்பது வெறும் ரவுடி மோதல் அல்ல, அது திட்டமிடப்பட்ட அரசியல் படுகொலை என்று ஆரம்பத்திலிருந்தே பகுஜன் சமாஜ் கட்சி கூறி வந்தது. தற்போது சிபிஐ விசாரணைக்கு வழி கிடைத்துள்ளதன் மூலம், முன்னாள் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் ஆவடி நாசர் மீதான சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளுக்கு விடை கிடைக்குமா? உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்களா? சிபிஐ விசாரணையின் முடிவுகள் தமிழக அரசியலில் அடுத்தகட்ட அதிர்வலைகளை உருவாக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




