அனுமதியின்றி வெளிநாட்டுப் பயணம் – தமிழக அரசுக்கு ஷோ-காஸ் நோட்டீஸ்!

விதிமுறைகளை மீறி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட தமிழக அமைச்சர்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர், அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளனர். எனினும், சட்ட விதிகளின்படி மத்திய வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகத்தின் முறையான அனுமதி பெறாமலும், டிப்ளமேடிக் பாஸ்போர்ட் பயன்படுத்தாமலும், சொந்த பாஸ்போர்ட்டில் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

 

இது அப்பட்டமான விதிமுறை மீறல் எனக் குறிப்பிட்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இது தொடர்பாக தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், அரசு பயணங்களை முறைப்படுத்தத் தவறிய தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது மத்திய அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *