ஈரானியப் பாலங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்.. 7 பேர் உயிரிழப்பு.!

Advertisements

ஈரானியப் பாலங்களை குறிவைத்து அமெரிக்க ராணுவம் நடத்தியத் தாக்குதலில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஈரானில் உள்ள பாலங்கள் மற்றும் போக்குவரத்து வழித்தடங்களைக் குறிவைத்து அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வட்டாரங்கள், இந்த தாக்குதலில் ஈரானிய ராணுவப் போக்குவரத்திற்கு முக்கியமான கடலோரப் பாலங்களையும், உள்கட்டமைப்புகளையும் அழித்ததாகத் தெரிவித்துள்ளது. மேலும், ஈரானிய கடற்படை நடவடிக்கைகளை முழுமையாக தடுப்பதே தங்களின் திட்டம் என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, ஈரான் ராணுவம் அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், குவைத், கத்தார் ஆகிய நாடுகள் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதன்காரணமாக மத்திய கிழக்கில் தொடர் போர் பதற்றம் நிலவி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *