iPhone: புதிய 15 சீரிஸ் மாடல்கள் அறிமுகம்!

Advertisements

ஐபோன்களின் முந்தைய வெர்ஷனை விடப் புதிய ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்யது உள்ளது.இந்த மாடலில் அதிவேக சார்ஜிங் வசதி இருக்கும் எனத்தெரிவிக்கப்படுள்ளது…

ஆப்பிள் நிறுவனம் இன்று ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்யது உள்ளது. புதிய போன்கள் அறிமுக நிகழ்வு இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்குத் துவங்கியது. இந்நிகழ்வு ஆப்பிள் இணையதளத்தில் ஒளிபரப்பபட்டது.

ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்கள் வெளியிடப்பட்டது. ஐபோன்களின் முந்தைய வெர்ஷனை விடப் புதிய மாடலில் அதிவேக சார்ஜிங் வசதி இருக்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் லைட்னிங் போர்டுக்கு மாற்றாக யு.எஸ்.பி. டைப் சி போர்டு வழங்கப்படுகிறது.

மேலும் இதன் டாப் எண்ட் மாடல்களில் அதிநவீன பிராசஸர், மேம்பட்ட பேட்டரி பேக்கப் மற்றும் கேமரா சார்ந்த புதிய அம்சங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் வாங்க காத்திருக்கின்றனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *