அதிமுகவிற்கு தேர்தல் பரப்புரை செய்த பிரேமாதா.. என்ன கொடுமை சார்.!

Advertisements

பிரேமாதா விஜயகாந்த் திமுக கூட்டணியில் இருந்துகொண்டே , அதிமுகவிற்கு தேர்தல் பரப்புரை செய்து கொண்டிருக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா..? ஆமா இப்படி தான் தமிழக அரசியல் களத்தில் நடந்து கொண்டிருக்கிறது ..இதனால் திமுக அமைச்சர்கள் பதற்றத்தில் இருக்கிறார்களாம்… மேலும் இந்த தேர்தலில் சிறுபான்மையினர் யாருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை பற்றியும் முழுமையாக பார்க்கலாம்..!

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் , அனைத்து கட்சிகளும் அவர்களுடைய கூட்டணி கட்சிகளுக்கு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.. இந்நிலையில் , பிரேமாதா விஜயகாந்த் திமுக கூட்டணியில் இருந்து அதிமுக கூட்டணிக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் எனவும், இட ஒதுக்கீடு சட்ட மசோதாவை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தோல்வி அடைய வைத்திருக்கிறார்கள் என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

கடலூரில் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இட ஒதுக்கீடு , சட்ட மசோதாவிற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது குறித்து பேசிய அவர் , திமுக பெண்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டது.. பெண் சிசுவை கருவிலேயே கொலை செய்ததற்கு சமமான செயல் திமுகவின் இந்த செயல் என்றும் , இந்தியா விடுதலை அடைந்து 80 ஆண்டுகள் ஆகிறது பெண்கள் படிக்க வேண்டும் வேலைக்கு போக வேண்டும் அதிகாரம் வேண்டும் ஆட்சி அதிகாரம் வேண்டும் என்று வாழ்க்கையில் எவ்வளவோ போராட்டங்களை சந்தித்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இது 40 ஆண்டு கால கனவு சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் குறைந்தது 33 விழுக்காடு கொடுக்க வேண்டும். முதலமைச்சர் மு க ஸ்டாலின் அந்த சட்ட மசோதாவை எரித்தது தேச துரோக செயல். பெரிய குற்றம் அதுவும் மகளிர் காண இட ஒதுக்கீடு மசோதா.. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் எரித்தது தேச துரோகம். இது வழக்கு பதிவு செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும். பெண்களுக்காக கொண்டுவரப்பட்ட ஒரு சட்டம் தோல்வியடைந்ததை பட்டாசு வெடித்து ஒரு முதலமைச்சர் கொண்டாடுகிறார் என்றால் அவரது மனநிலையை தமிழ்நாட்டுப் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்..

மேலும் , திமுகவை அகற்ற வேண்டும் என்பதற்காகத்தான் தேமுதிக விஜயகாந்த் தொடங்கினார் ஆனால் அந்த திமுக உடனே பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி வைத்திருக்கிறார் இது ஒருபுறம் இருந்தாலும் அந்த கூட்டணிக்கு சென்று அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். அவர் ஒருவரே போதும் தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கஞ்சா மது கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று முதலமைச்சரை மேடையில் வைத்துக் கொண்டே எங்கு பார்த்தாலும் போதை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகிறது என்று எங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்.

மேலும் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும் என சொல்கிறார்.” என்கின்றார். இது ஒரு புறம் இருக்க , மற்றொரு புறம் அதிமுக – பாஜக கூட்டணி..இந்த கூட்டணி இணைந்திருப்பதால், இந்த கட்சிகளுக்கு சிறுபான்மை மக்கள் ஆதரிக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. இதனை உணர்ந்தே அதிமுகவில் ஒரேயொரு இஸ்லாமியருக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுபான்மை மக்களுடைய வாக்குகள் யாருக்கு போகும் என்ற கேள்வி இருக்கு ..

மேலும் , திமுக மற்றும் விஜய் ஆகிய இரு காட்சிகளில் ஏதாவது ஒரு கட்சிக்கு செல்ல வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் விஜய் இதுவரை கிறிஸ்தவர்களை நேரடியாக சந்திக்கவில்லை. எந்த தேவாலயங்களுக்கும் சென்று ஆதரவும் கோரவில்லை. விஜய் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் மட்டும் பள்ளிவாசல் மற்றும் தேவாலயங்களுக்கு சென்று ஆதரவு கோரி வருகின்றனர்.

இது களத்தில் எந்த அளவுக்கு விஜய்க்கு சாதகமாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது என்பதும் இந்த இடத்தில குறிப்பிடத்தக்கது..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *