iPhone 15: 17 மணிநேரம் காத்திருந்து முதல் போனை வாங்கிய நபர்!

Advertisements

கெத்து காட்டும் ஐபோன் 15…! 17 மணிநேரம் காத்திருந்து முதல் ஐபோன் வாங்கிய நபர்…

இந்தியாவில் முதல் ஐபோன் 15 போனை சுமார் 17 மணி நேரம் காத்திருந்து ஒருவர் வாங்கியுள்ளார்.

ஸ்மார்ட் போன்களில் மிகவும் விலை உயர்ந்ததாகப் பார்க்கப்படுவது ஐபோன் தான். ஐபோனிற்கு எனத் தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. ஐபோனின் அடுத்த மாடல் வெர்ஷனான ஐபோன் 15 மாடல் இன்று உலகம் முழுவதும் மார்க்கெட்டில் அறிமுகமாகி உள்ளது. இந்தியாவிலும் ஐபோன் 15, ஐபோன் 15பிளஸ், ஐபோன்  15 புரோ, ஐபோன் 15 புரோ மேக்ஸ் மாடல்கள் அறிமுகமாகியுள்ளன.

தலைநகர் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள இரண்டு ஆப்பிள் ஸ்டோர்களில் இந்த ஐபோன் 15 சீரிஸ் விற்பனைக்கு வந்துள்ளது. ஐபோன் விற்பனை ஸ்டோத் காலை 8 மணிக்குத் திறக்கப்படும் என்ற நிலையில் அதிகாலை 3 மணியிலிருந்து நீண்ட வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர் முந்தியடித்து கொண்டு ஐபோன் 15 வாங்கினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்த நிலையில் விறுவிறுப்பாக ஆப்பிள் ஐபோன் 15 மாடல் விற்பனையாகி வருகிறது.

இதில் ஒரு வாடிக்கையாளர் சுமார் 17 மணி நேரம் காத்திருந்து இந்தியாவின் முதல் ஐபோன் 15 மாடலை வாங்கியுள்ளார். மும்பை ஆப்பிள் ஸ்டோரில் நேற்று மாலை 3 மணியிலிருந்து காத்திருந்த அந்த நபர் தனது கனவு போனை வாங்கியதாக மகிழ்ந்துள்ளார்.

இந்தியாவில் விற்பனை செய்யும் ஐபோன் 15 சீரிஸ் விலை:

ஐபோன் 15 (128 GB) – ரூ 79,900
ஐபோன் 15 (256 GB) – ரூ 89,900
ஐபோன் 15 (512 GB) – ரூ 1,09,900

ஐபோன் 15+ (128 GB) – ரூ 89,900
ஐபோன் 15 + (256 GB) – ரூ 99,900 ஐபோன் 15 + (512 GB) – ரூ 1,19,900

ஐபோன் 15 Pro (128 GB) – ரூ. 1,34,900
ஐபோன் 15 Pro (256 GB) – ரூ.1,44,900
ஐபோன் 15 Pro (512 GB) – ரூ. 1,64,900
ஐபோன் 15 Pro (1 TB) – ரூ. 1,84,900

ஐபோன் 15 Pro max (256 GB) – ரூ 1,59,900
ஐபோன் 15 Pro max (512 GB) -ரூ 1,79,900
ஐபோன் 15 Pro max (1 TB) – ரூ. 1,99,900

ஐபோன் 15 சீரிஸ் மட்டுமில்லாமல் ஐபோன் வாட்ச் சீரிஸ் 9, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 உள்ளிடவைகளையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *