
சர்வதேச சந்தையில் நிலவும் குழப்பமான சூழலை கையாள்வதற்காக பிரதமர் இந்த வேண்டுகோளை விடுத்திருக்கிறார்!
ரூபாய் மதிப்பு சரிந்து நாட்டின் பொருளாதாரம் அகல பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது!
இது பற்றி விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்..
ஈரான் – அமெரிக்காவின் போர் நடவடிக்கை உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கு. ஈரான் மற்றும் அமெரிக்க நாடுகளில் இந்த போரின் விளைவாக பலரும் உயிர்மாய்க்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.இந்த இருநாடுகளின் நிலைப்பாடு என்ன என்று தெரியாத பல பொதுமக்களும் உயிர்மாய்க்கத்திற்கு உள்ளாகி இருக்காங்க. இந்த பதற்றமான சூழலில் தான், ஈரான் நிர்வாகம் ஹோர்முஸ் நீரிணையை யாரும் நுழையாதபடி மூடியிருக்கிறார்கள்.
இந்த விவகாரத்தினால இந்தியா மட்டும் இல்லாமல் பல உலக நாடுகளும் பெரும் பாதிப்பை சந்தித்து இருக்கிறார்கள். எரிவாயு , கட்சா எண்ணெய், மற்றும் உரங்கள் மீதான விலையேற்றம் இந்திய மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதிச்சுச்சு. தற்போது உள்ள கையிருப்புகளை கருத்தில் கொண்டு எரிபொருள் சாதனங்களை ரேஷன் போல் கட்டுப்பாட்டுடன் வழங்கி வருகிறார்கள் .
உர விலையேற்றம், எரிபொருள் விலையேற்றம், தங்கம் போன்ற அத்தியாவசிய பொருட்களுடைய விலை கிடுகிடுவென உயர்ந்து வர நிலையிலதா மக்களுக்கு பிரதமர் மோடி இதுகுறித்து ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கிறார். ஈரான் – அமெரிக்கா வினுடைய போர் சூழல் காரணமாக கட்சா எண்ணெய், எரிவாயு சிலிண்டர் , தங்கம் போன்ற பொருட்களுடைய விலையேற்றம் காரணமாக நாட்டின் அந்நிய செலாவணிக்கு அழுத்தம் ஏற்பட்டு இருக்கு.
இதற்கு இடையேதா அமெரிக்க டாலருக்கு நிகராக இருக்குற இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில வீழ்ச்சியடைந்திருக்கிறது. அவர் விடுத்த வேண்டுகோளில் “அத்தியாவசியமற்ற வெளிநாட்டு பொருட்களை வாங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.தேவைஇல்லாத வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். தங்கம் வாங்குவதை ஒரு வருடத்திற்கு தள்ளிப் போட வேண்டும். என்று தெரிவிச்சுருக்காரு.
இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து இருக்குறாங்க. ரூபாய் மதிப்பு சரிந்து இந்தியப்பொருளாதாரம் அகல பாதாளத்தில் சரிந்து விழுந்து விட்டது என்று சாடியிருக்கிறார்கள். இந்த நிலையிலதா மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் மும்பையில் நடைபெற்ற சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியினுடைய நிறுவன தின விழாவுல கலந்துகொண்டு பேசிருக்காங்க,
அந்நிய செலாவணியை சேமிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோள் முக்கியமானதுதா.சர்வதேச சந்தையில ஏற்பட்டு இருக்கும் குழப்பத்தை கையாள்வதற்காகவே பிரதமர் மோடி இந்த வேண்டுகோளை விடுத்திருக்கிறார். இதன் மூலம் இந்தியாவினுடைய அந்நிய செலாவணியை சேமித்து,ரூபாய் பலத்தை பாதுகாத்து இந்திய பொருளாதாரத்தை இன்னும் வலுவாக வைத்திருக்க முடியும் என்று நிர்மலா சீதாராமன் தெளிவு படுத்தி இருக்குறாங்க.
உள்நாட்டு சந்தைகளில் உருவாகும் நுகர்வு, நமது பொருளாதார வளர்ச்சியை தக்கவைக்க உதவுகிறது. தற்போதும் கூட, இதுவே உலகில் மிக வேகமான வளர்ச்சியாக உள்ளது. நமது உள்நாட்டு உற்பத்தி, வேளாண் வளர்ச்சி, சுற்றுலா, தகவல் மற்றும் அது சார்ந்த சேவைகள் ஆகிய துறைகளுக்கு நிலையான, கணிக்கக்கூடிய ஆதரவு வழங்கப்படாவிட்டால், இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் கடினமாகிவிடும் என்றும் தெரிசிச்சுருக்குறாங்க.


