அண்ணாமலைக்கு கேரள தலைவர் பதவி: அமித்ஷாவுடன் திடீர் சந்திப்பு.!

Advertisements

உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஓ பன்னீர்செல்வம் சந்தித்து திரும்பிய நிலையில் அடுத்த கட்டமாக சென்னையில் இருந்து புறப்பட்ட தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை அமித்ஷாவை அவரது வீட்டில் சந்தித்து பேசி இருக்கிறார். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பணியாற்றிய போது,  தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தது அவரது தலைமையில் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் அதி தீவிரமாக பணியாற்றி வந்தார்கள்,

திமுக அதிமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளுக்கு சவால் விடும் நிலையில் பாரதிய ஜனதா கட்சியை மிகவும் முன்னிலைப்படுத்தி வந்தார். இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் தனக்கென தனி செல்வாக்கை உருவாக்கி வருகிறார் என அண்ணாமலை மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார் . பதிலுக்கு திருநெல்வேலியை சேர்ந்த நைனார் நாகேந்திரன் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில்,  அண்ணாமலைக்கு டெல்லி மேல் இடத்தில் முக்கிய பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரையிலும் அவருக்கு எந்தவித பதவியும் வழங்கப்படவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கும் அண்ணாமலை அடுத்த கட்டமாக பலவித முடிவுகளை கையில் எடுத்து வைத்திருக்கிறார். தனியாக ஒரு அமைப்பு தொடங்கி , அதன் மூலம் தமிழக வெற்றி கழகத்தில் இணையலாம் என அவர் கடைசி கட்டமாக திட்டமிட்டு இருப்பது தெரிய வந்தது,

இதற்கிடையே டெல்லி பாஜக மேலிடம் அவரை சமாதானம் செய்து தேர்தல் வரை பணியாற்றுங்கள் என்று கூறி இருப்பதாக தெரிகிறது. இதனால் இருதலைக் கொள்ளி இரும்பாக தவித்து வரும் அண்ணாமலை என்ன செய்யப் போகிறார் என்பது தெரியவில்லை. இந்த சூழ்நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் திடீரென டெல்லிக்கு கிளம்பி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார் .

அப்போது அவர் பேசும்போது , வருகிற 15ஆம் தேதி தனி கட்சி தொடங்க இருக்கிறேன், அதற்கு முன்னதாக அதிமுகவை ஒருங்கிணைக்க ஏற்பாடு செய்யுங்கள் அதிமுகவை ஒருங்கிணைத்தால் மட்டுமே தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வெற்றி பெற முடியும் என தெரிவித்தார், இதற்கு பதிலளித்த அமைச்சர் வருகிற 10-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூடுகிறது . இதன் பின்னர் நான் சென்னைக்கு வருகிறேன் அப்பொழுது இது குறித்து முடிவு எடுக்கலாம் என தெரிவித்திருக்கிறார்,

இந்த நிலையில் திடீரென அமித்ஷா தரப்பில் இருந்து அண்ணாமலைக்கு ஒரு முக்கிய தகவல் தரப்பட்டது உடனடியாக டெல்லி கிளம்பி வரவும் என அந்த தகவல் தெரிவித்தது. இதன் அடிப்படையில் அண்ணாமலை டெல்லி சென்றார். அங்கு அமித்ஷா வீட்டில் அவரை சந்தித்து பேசினார்.தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் கூட்டணி குறித்தும் இந்த சந்திப்பில் பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அமித்ஷா வீட்டில் மேலும் பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே பி நட்டா பாஜக அமைப்புச் செயலாளர் பி எல் சந்தோஷ் ஆகியோரும் பங்கேற்று பேசியிருக்கின்றனர். எனவே இது ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டமாக பார்க்கப்படுகிறது.பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைமையில் விரைவில் மாற்றம் செய்யப்பட்டது ஏற்பட இருக்கிறது.  இந்த நிலையில் அண்ணாமலையுடன் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதன் பின்னணி குறித்து விசாரணை செய்தபோது கேரளாவில் விரைவில் தேர்தல் வர இருக்கிறது.  எனவே கேரள மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின் மேற்பார்வையாளராக அண்ணாமலை நியமிக்கப்படுவார் என தெரிகிறது.  இதன் நிமித்தம் தான் அவரை அழைத்து அமித்ஷா உட்பட முக்கிய தலைவர்கள் பேசியிருப்பதாக தெரிகிறது.

கேரள மாநில தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்படும் பட்சத்தில் இது குறித்து அவரிடம் விவாதம் செய்யப்பட்டு இருக்கிறது மேலும் தமிழக தேர்தல் நிலவரம் குறித்தும் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கின்றனர். இதன் மூலம் அனேகமாக தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி தலைவர் பதவி வகித்த அண்ணாமலைக்கு இனி கேரள மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் பதவி வழங்கப்படும் என தெரிகிறது.

ஆனால் இது குறித்து அண்ணாமலை என்ன முடிவு எடுத்தார்? அமித்ஷாவிடம் தனது முடிவு குறித்து பேசினாரா என்பது பற்றி தகவல் எதுவும் தெரியவில்லை.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *