Israel’s Gaza ground offensive: அதிநவீன ஹெலிகாப்டர் பற்றிய தகவல்!

Advertisements

இஸ்ரேல் போரில் பயன்படுத்தப்படும் அதிநவீன ஹெலிகாப்டர் பற்றிய தகவல் வெளியே கசிந்துள்ளது.

ஹமாஸ் பிரிவினைவாதிகளுக்கும், இஸ்ரேலுக்குமான போரில் பயன்படுத்தப்படும் அதிநவீன ஹெலிகாப்டர் பற்றிய தகவல் வெளியே கசிந்துள்ளது. இந்த அதிநவீன ஹெலிகாப்டர்கலை இந்தியா தனது வான்படையில் 2020ம் ஆண்டு வாங்கியுள்ளன என்பதும் தெரிய வந்துள்ளது.

 இஸ்ரேல் மீது ஹமாஸ் பிரிவினைவாதிகள் கடந்த 7-ம் தேதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். அதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க, இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் தீவிரமடைந்து வருகிறது. 15 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த தாக்குதலில் காசாவில் 4,137-க்கும் அதிகமான பாலஸ்தீனயர்களும், இஸ்ரேலில் 1,400-க்கும் அதிகமானவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

முதல் நாள் தாக்குதில் ஹமாஸ் தீவிரவாதிகள் 200க்கும் அதிமானவர்களை பிணையக் கைதியாக பிடித்துச் சென்றனர் என்று இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியிருந்தது. நாளுக்கு நாள் இஸ்ரேல் – ஹமாஸ் போர் தீவிரமடைந்து வருவது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஐநாவும் அப்பாவி மக்களின் நலன் கருதி போரை நிறுத்த வலியுறுத்தி வருகிறது. 

இந்த சூழலில் ஹமாஸ் மீதான தாக்குதலில் இஸ்ரேல் பயன்படுத்தி வரும் அதிநவீன ஹெலிகாப்டர்  குறித்த தகவல் வெளியாகியுள்ளது. போரில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அதிநவீன ஆயுதங்களையும், தொழிற்நுட்ப யுக்திகளையும் பயன்படுத்தி வருவதுடன், ஆட்டோமொபைல் வாகனங்கள் கூட அட்வான்ஸானவைகளாக உள்ளன.

குறிப்பாக, ஹமாஸ் பிரிவினைவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் நாட்டு இராணுவம் பயன்படுத்தி வரும் (Boeing AH-64 Apache) ஏ.எச்-64 அப்பாச்சி  ஹெலிகாப்டர்கள் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளன. தொலைக்காட்சிகளில், சமூக வலைத்தளங்களில் இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் தொடர்பாக வெளியாகும் படங்களிலும், வீடியோக்களிலும் இந்த அப்பாச்சி ஹெலிகாப்டர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
 
இஸ்ரேலில் பயன்படுத்தும் ஏ.எச்-64 அப்பாச்சி ஹெலிகாப்டர்களில் 30மிமீ செயின் துப்பாக்கி மற்றும் ஹெல்ஃபையர் ஏவுகணைகள் உள்ளன. இவற்றின் உதவியுடன் எந்தவொரு பகுதியையும் அழிக்க முடியும். உலகின் மிகவும் அட்வான்ஸான மல்டி ரோல் போர் ஹெலிகாப்டரான ஏ.எச்-64இ அமெரிக்கன் விமான நிறுவனமான போயிங்-ஆல் உருவாக்கப்படுகிரது.  அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் அனைத்தையும் உருவாக்கும் உரிமம் போயிங் நிறுவனத்திடமே உள்ளது.
அதன்படி, 2028ஆம் ஆண்டு வரையில் தொடர்ச்சியாக ஏ.எச்-64இ போர் ஹெலிகாப்டர்களை உருவாக்கும் திட்டங்கள் போயிங் நிறுவனம் பெற்றுள்ளன. உலகளவில் மிகவும் பலம் வாய்ந்த ராணுவத்தை இஸ்ரேல் வைத்திருப்பதாக கருதப்படும் நிலையில், அந்த ராணுவம் பயன்படுத்தும் ஹெலிக்பாடரும் அதற்கு ஏற்றார்போல் பலத்துடன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
 
நெகேவ் பாலைவனத்தில் உள்ள ரமோன் விமான தளத்தில் இரு அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இஸ்ரேல் பராமரித்து வருவதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் போல் மூலம் உலகையே மிரள வைத்துள்ள அதி நவீன ஏ.எச்-64இ ஹெலிகாப்டர்கள் இந்தியாவிடமும் உள்ளன. இந்த ஹெலிகாப்டர்களை “பறக்கும் டேங்குகள்” என இந்திய இராணுவம் அழைக்கிறது. 2020இல் இந்திய வான் படையில் 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் முயற்சியாக இந்த ஹெலிகாப்டர்கள் இந்திய ராணூவத்தில் இணைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *