
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரொமாரியோ ஷெப்பர்ட் அதிரடியாக ஆடி 14 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்திருந்தார். சிஎஸ்கே பந்துவீச்சாளர் கலீல் அஹமது வீசிய ஒரே ஓவரில் அதிக ரன்கள் சேர்த்து பல சாதனைகளை செய்து இருக்கிறார் ரொமாரியோ ஷெப்பர்ட்.
ரொமாரியோ ஷெப்பர்ட் ஐபிஎல் வரலாற்றிலேயே இரண்டு வெவ்வேறு போட்டிகளில் ஒரே ஓவரில் 30 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோர்களை எடுத்து இருக்கிறார். இதற்கு முன் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போது, டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அன்ரிச் நார்ட்ஜே பந்துவீச்சில் 32 ரன்களைச் சேர்த்திருந்தார்.
இதுவரை ஐபிஎல் வரலாற்றில் அதிவேகத்தில் அடிக்கப்பட்ட அரை சதம் என்ற சாதனை யஷஸ்வி ஜெய்ஸ்வால் வசம் உள்ளது. அவர் 13 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தார். இரண்டாவது இடத்தில் கிறிஸ் கெய்ல் 17 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தார். அவரை விட வேகமாக 14 பந்துகளில் அடித்து ரொமாரியோ ஷெப்பர்ட் புதிய சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றின் இரண்டாவது அதிவேக அரை சதமாக இது அமைந்தது. மேலும், ரொமாரியோ ஷெப்பர்ட்டின் ஸ்ட்ரைக் ரேட் 378.57 என்பதாக இருந்தது. ஐபிஎல் தொடரில் 50 ரன்கள் அடித்த பேட்ஸ்மேன்களில், அதிக ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருந்த சாதனையை ரொமாரியோ ஷெப்பர்ட் செய்திருக்கிறார்.
தற்போது மூன்றாவது இடத்தில் ரொமாரியோ ஷெப்பர்ட் இருக்கிறார். இவர் 53 ரன்களை 378.75 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருக்கிறார். இதுவரை இந்த மூவர் மட்டுமே 350+ ஸ்ட்ரைக் ரேட்டுக்கு அதிகமாக பேட்டிங் செய்து அரை சதம் அடித்த வீரர்கள். இந்த மூவரிலேயே அதிக ஸ்ட்ரைக் ரேட்டை உடையவர் ரொமாரியோ ஷெப்பர்ட் தான்.



