Advertisements

விமான சேவையை 10 சதவீதம் குறைக்கும்படி இண்டிகோ நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவு உத்தரவிட்டுள்ளது.
இண்டிகோ விமான நிறுவனத்தின் செயல்பாட்டு பிரச்னையால், நாடு முழுதும் விமான சேவை முடங்கி உள்ள நிலையில், குளிர் கால அட்டவணையில், 10 சதவீதம் சேவையை குறைக்கும்படி, சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த உத்தரவுக்குப் பிரபல நிறுவனமான இண்டிகோ இணங்கவில்லை. இதனால், இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகள் நாடு முழுதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக கடந்த ஒரு வாரமாக முடங்கி உள்ள சேவையால், ஏராளமான பயணியர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 64 ஆயிரத்து 346 விமானங்களை இயக்க இண்டிகோ நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால், 59 ஆயிரத்து 438 விமானங்களை மட்டுமே இயக்கியதுடன், 951 விமான சேவைகளை ரத்து செய்தது.
Advertisements



