தென்னை விவசாயத்துக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வசதி..!

தென்னை விவசாயத்துக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்டத் தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டுதோறும் செப்டம்பர் இரண்டாம் நாள் உலகத் தேங்காய் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் புவிசார் குறியீடு பெற்றுள்ள ஈத்தாமொழி நெட்டைத் தென்னை விளைச்சல் நோய்த் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தேங்காயின் விலை அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் ஒரு ஏக்கருக்கு ஆயிரம் தேங்காய் விளைந்த நிலையில் இப்போது நோய்த் தாக்கத்தால் ஒரு ஏக்கருக்கு 300 தேங்காய் மட்டுமே விளைகிறது.

எனவே தென்னை விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன், நோய்த் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட தென்னைக்கு இழப்பீடு ஆகியவற்றை அரசு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *