Cricket World Cup: பாகிஸ்தானை ஊதி தள்ளிய இந்திய அணி!

Advertisements

உலகக் கோப்பை 12ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தானை ஊதி தள்ளிய இந்திய அணி!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மிகவும் முக்கியமான போட்டியான உலகக் கோப்பையின் 12ஆவது லீக் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தார். முதல் 2 போட்டிகளில் டெங்கு பாதிப்பால் இடம் பெறாத சுப்மன் கில் இந்தப் போட்டியில் இடம் பெற்றார்.

பாகிஸ்தான் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதையடுத்து அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம் உல் ஹக் இருவரும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். இதில், முதல் ஓவரை வீசிய பும்ரா பந்தில் அப்துல்லா ஒரு பவுண்டரி அடித்தார். 2ஆவது ஓவரை முகமது சிராஜ் வீசினார். இந்த ஓவரில் இமாம் உல் ஹக் 3 பவுண்டரிகள் விளாசினார். இப்படியே தொடர்ந்து இருவரும் பவுண்டரியாக விளாசினர்.

அதன் பிறகு சிராஜ் வீசிய 8ஆவது ஓவரில் அப்துல்லா ஷபீக் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஹர்திக் பாண்டியா பந்து வீச வந்தார். அவர் வீசிய முதல் ஓவரில் 7 ரன்களும், 2ஆவது ஓவரில் 11 ரன்களும் கொடுத்தார். அதன் பிறகு பாண்டியா தனது 3ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரில் இமாம் 2ஆவது பந்தில் பவுண்டரி அடித்தார். அதன் பிறகு 3ஆவது பந்தை வீசுவதற்கு முன்னதாக, பாண்டியா கையில் பந்தை வைத்துக் கொண்டு மந்திரம் போட்டுள்ளார். அதன் பிறகு தான் பந்தை வீசியுள்ளார்.அந்தப் பந்தில் இமாம் உல் ஹக் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.அடுத்து அடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பாகிஸ்தான் அணி கடைசியாக42.5 ஒவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து191 ரன்களை எடுத்தது.

விக்கெட் வீழ்ச்சி:
41-1 (அப்துல்லா ஷபீக், 8) 73-2 (இமாம் உல் ஹக், 12.3) 155-3 (பாபர் அசாம், 29.4) 162-4 (சவுத் ஷகீல், 32.2) 166-5 (இப்திகார் அகமது, 33) 168-6 (முகமது ரிஸ்வான், 34) 171-7 (ஷதாப் கான், 35.2) 187-8 (முகமது நவாஸ், 40) 187-9 (ஹசன் அலி, 40.1) 191-10 (ஹாரிஸ் ரவுப், 42.5)

அதனைத் தொடர்ந்து192 ரன்களை எடுத்தால் வெற்றியெனக் களமிறங்கி  விளையாடிய  இந்திய அணி வீரர்கள்ரோகித் சர்மா, சுப்மன் கில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர்.  கடைசியாக இந்திய அணி 30.1 ஒவரில் 3 விக்கெட்டுகளை இழந்து192 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *