Lok Sabha Elections 2024: தே.மு.தி.கவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறியுள்ளார். புதிய தமிழகம் கட்சிக்கு 1 தொகுதி, எஸ்டிபிஐ-க்கு 1 தொகுதியென ஒதுக்கப்படுகிறது.

சென்னை: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தலில் போட்டியிடுவோர் இன்று காலை 11 மணி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம். இந்நிலையில், தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

அதன்பின் பேசிய எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறியுள்ளார். புதிய தமிழகம் கட்சிக்கு 1 தொகுதி, எஸ்டிபிஐ-க்கு 1 தொகுதியென ஒதுக்கப்படுகிறது.

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணகிரி தொகுதி உடன்பாட்டிற்கு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அதன்பின் இருவரும் தொகுதி உடன்பாட்டிற்கு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதில் கிருஷ்ணசாமிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *