Gold refining: பட்டறைக்குச் சீல்!

Advertisements

தங்கம் உருக்கும் பட்டறைக்குச் சீல்!

சென்னை: சென்னை பூக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் தங்கம் உருக்கும் பட்டறைக்கு வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். என்.எஸ்.சி. போஸ் சாலையில் இயங்கிவந்த பிரவீன் என்பவருக்குச் சொந்தமான நகை உருக்கும் பட்டறைக்குச் சீல் வைத்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள், கடத்தல் கும்பல் கொடுத்தது என வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 4 பைகளில் இருந்த தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பட்டறையில் இருந்த 5 பேரையும் தியாகராயர் நகரில் உள்ள வருவாய் புலனாய்வு துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *