இந்திய ராணுவம் தாக்கினால், பதிலடி தர பாகிஸ்தான் தயார் – அசிம் முனிர் எச்சரிக்கை.!

இந்திய ராணுவம் தாக்கினால், பதிலடி தர பாகிஸ்தான் ராணுவம் தயாராக இருப்பதாகப் பாகிஸ்தான் முப்படை தளபதி அசிம் முனிர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் முப்படை தளபதி அசிம் முனிர், கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் உள்ள ராணுவ அகாடமியில் நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், பாகிஸ்தானின் எல்லை பாதுகாப்புக்கு சவாலாக இருக்கும் எந்த வெளிப்புற சக்தியையும் முறியடிக்க படைகள் தயாராக உள்ளது என்றார்.

இதை தொடர்ந்து, தெஹ்ரீக் – இ – தலிபான் பாகிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் பிரிவினைவாத குழுக்களுக்கு எதிராக ராணுவம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன என்றும் அமைதியை நிலைநாட்டுவது ராணுவத்தின் கடமை என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அசிம் முனிர், பயங்கரவாதத்தை வேரோடு அழிப்பதே ராணுவத்தின் முதன்மையான இலக்கு என்றும் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பில் பாகிஸ்தான் ஒரு கடினமான காலகட்டத்தை கடந்து மீண்டு வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், இந்தியாவுடன் நிலவும் பதற்றங்கள் குறித்தும் பேசிய அசிம் முனீர், இந்திய ராணுவம் தாக்கினால், பதிலடி தர பாகிஸ்தான் ராணுவம் தயாராக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *