India vs South Africa : மூன்றாவது இருபது ஒவர் போட்டியில் இந்திய அணி வெற்றி.!

Advertisements

இந்தியா,தென் ஆப்பிரிக்கா இடையேயான மூன்றாவது இருபது ஒவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிப் பெற்றது.

இந்தியா,தென் ஆப்பிரிக்கா இடையேயான மூன்றாவது இருபது ஒவர் கிரிக்கெட் போட்டி இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதை தொடர்ந்து, முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 117 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதில், அதிகபட்சமாக கேப்டன் மார்கரம் 61 ரன்கள் சேர்த்தார்.

இந்திய அணியின் பந்து வீச்சு தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து, களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 120 ரன்கள் சேர்த்து தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது.

இதில், இந்திய அணியின் பேட்டிங்கில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 35 ரன்களும் சுப்மன் கில் 28 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வழிவகைச் செய்தனர்.

மேலும், இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட இருபது ஒவர் கிரிக்கெட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *