
உண்மையை நிலைநிறுத்தி பாஜக அரசை இந்தியாவிலிருந்து அகற்றுவோம் என்று நாடளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் நாடளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது ராகுல் காந்தி பேசியபோது, வாக்கு திருட்டு குறித்த தனது குற்றச்சாட்டுகளுக்காக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நடுங்கும் கைகளுடன் தேர்தல் ஆணையத்துக்காக அவர் விளக்கமளித்ததாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, பிகாா் தோ்தலின்போது பெண்களின் வங்கிக் கணக்குகளில் தலா 10,000 ரூபாய் பாஜக கூட்டணி அரசால் செலுத்தப்பட்டது என்றும் இதுகுறித்து தோ்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும், உண்மையை நிலைநிறுத்தி, நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் ஆர்எஸ்எஸ் அரசாங்கத்தை இந்தியாவிலிருந்து அகற்றுவோம் என்று தெரிவித்தார்.


