
புதுடெல்லி:
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர்களில் ஒருவரான சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, இரட்டையர் பிரிவில் சிராக் ஷெட்டியுடன் இணைந்து 2022-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு, காமன்ல்வெத் விளையாட்டு, 2023-ம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி ஆகியவற்றில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இந்த இணை உலக தரவரிசையில் முதலிடத்தை அடைந்தது. கேல் ரத்னா விருதுக்குத் தேர்வாகியுள்ள சாத்விக் சாய்ராஜ், இதுவரை அந்த விருதைப் பெறவில்லை. டெல்லியில் நடைபெறும் பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் போர்டு அணிகளுக்கான பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்றுள்ள சாத்விக், கேல் ரத்னா விருதை நேற்று பெற்றுக்கொள்ள திட்டமிட்டிருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவரது தந்தை மற்றும் முன்னாள் உடற்கல்வி ஆசிரியரான காசி விஸ்வநாதன் (வயது 65), அவரது மனைவி ரங்கமணி மற்றும் குடும்ப நண்பருடன் டெல்லிக்கு சென்றுள்ளார்.
