விவாகரத்து பெற்ற யுஸ்வேந்திர சாஹல்- தனஸ்ரீ!

Advertisements

மும்பை:

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ விவாகரத்து செய்யும் வாய்ப்புகுறித்து தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இருவரும் சமீபத்தில் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும், விவாகரத்து தொடர்பான அறிவிப்பு எப்போது வந்தாலும் அதற்குத் தயாராக இருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது.

யுஸ்வேந்திர சாஹல், 2020-ம் ஆண்டு தனஸ்ரீ என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். மாடலிங்கில் ஈடுபட்டிருந்த தனஸ்ரீ, பின்னர் கான்சர்ட்-களில் பாடகியாக அறிமுகமானார். கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடன போட்டியாளராகப் பங்கேற்கும் வாய்ப்பு தனஸ்ரீக்கு கிடைத்தது.

தனஸ்ரீயின் செயற்பாடுகள் சாஹலுக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாமெனக் கூறப்படுகிறது, மேலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இதற்கான சான்றுகள் காணப்படுகின்றன.

2023-ம் ஆண்டில் சாஹல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து தனஸ்ரீயை நீக்கினார். ஆனால், விவாகரத்து தொடர்பான எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், நேற்று இருவரும் மும்பையில் உள்ள பாந்த்ரா குடும்ப நீதிமன்றத்தில் ஆஜராகி பரஸ்பர விவாகரத்து பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கடந்த 18 மாதங்களாக அவர்கள் தனித்தனியாக வாழ்ந்ததாகவும் தெரியவந்துள்ளது. நேற்று மாலை, நீதிபதி அவர்களுக்கு அதிகாரபூர்வமாக விவாகரத்து வழங்கியுள்ளார்.

தனஸ்ரீ வர்மாவுக்கு யுஸ்வேந்திர சாஹல் குறிப்பிட்ட தொகையை ஜீவனாம்சமாக வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான தொகை ரூ. 60 கோடியை வரை இருக்க வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

2025-ம் ஆண்டு நிலவரப்படி தனஸ்ரீ வர்மா.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *