ராஜஸ்தானை வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றி……..!

Advertisements

ஜெய்ப்பூரில் நடைபெற்ற 36ஆவது ஐ.பி.எல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 36ஆவது ஐ.பி.எல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன் படி, முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 228 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி 103 ரன்களும், துருவ் ஜுரல் 51 ரன்களும் சேர்த்தனர்.

பந்து வீச்சு தரப்பில் ஐதராபாத் அணியின் ஈஷான் மலிங்கா இரண்டு விக்கெட்களும் பேட் கம்மின்ஸ், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தினர். இதன் பின்னர், 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி, 18.3 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்து அபார வெற்றிப்பெற்றது.

இதில், அதிகபட்சமாக ஈஷான் கிஷன் 74 ரன்களும், அபிஷேக் ஷர்மா 57 ரன்களும் சேர்த்து ஐதராபாத் அணியின் வெற்றிக்கு வழிவகைச் செய்தனர். இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் தனது ஐந்தாவது வெற்றியை பதிவுச் செய்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *