அதிகாரமிக்க நபர்களின் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 8வது இடம்

இந்தியாவின் அதிகாரமிக்க நபர்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 8வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சக்தி வாய்ந்த டாப் 10 தலைவர்கள் பட்டியலை இந்தியா டுடே நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 8வது இடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அடக்கமான போர் வீரர், தென் கோட்டையை பிடித்து வைத்திருப்பவர் என்றும் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. மேலும், மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காமல் செய்ததன் மூலம் தென் இந்தியாவில் இண்டியா கூட்டணிக்கு ஒரு முக்கிய அம்சமாக மு.க.ஸ்டாலின் எஃகு போல திகழ்கிறார் என்றும் இந்தியா டுடே பாராட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *