Sand Quarry: அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களுக்கு தடை!

Advertisements

மணல் குவாரிகள் தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவைவிடக் கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தைச் சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, சோதனைகள் நடத்தி பல்வேறு ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளது.

இந்தநிலையில் திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான விவரங்களுடன் ஆஜராகும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இந்தச் சம்மனை ரத்து செய்யக்கோரி தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், 5 மாவட்ட கலெக்டர்கள் இணைந்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே, அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை 28ந்தேதி (இன்று) தள்ளிவைத்தனர்.இந்நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக மாவட்ட கலெக்டர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதித்தனர்.

அமலாக்கத்துறை ஆட்சேப மனுவுக்குப் பதிலளிக்க தமிழக அரசுக்கு 3 வாரம் அவகாசம் அளித்தனர்.
சம்மனை எதிர்த்துத் தமிழக அரசும், மாவட்ட கலெக்டர்களும் தாக்கல் செய்த மனுக்களைத் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *