கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

Advertisements
கோவை :
இரண்டு நாள் சுற்று பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வந்தடைந்தார்.
சென்னையில் இருந்து விமான மூலம் கோவை வந்த முதலமைச்சருக்கு விமான நிலையத்தில் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில், கோவை விளாங்குறிச்சியில் 158 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் எல்காட் கட்டிடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். இதனை அடுத்து, மாலை 4 மணி அளவில் பொற்கொல்லர்களுடன் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து மாலை 5 மணி அளவில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்நிலையில் முதலமைச்சர் வருகையொட்டி கோவை மாநகரப் பகுதியில், 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குறிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *