
இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 10 ஓவர்கள் வீசி 35 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் இன்றைய இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை வென்று விடும்.
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்கள் பிலிப் சால்ட் மற்றும் பென் டக்கெட் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். பிலிப் சால்ட் 26 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
இருவரும் முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அடுத்து வந்த ஜோ ரூட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பென் டக்கெட் 65 ரன்கள் எடுத்து வெளியேற, ஹேரி புரூக் 31 ரன்களும், கேப்டன் ஜோஸ் பட்லர் 34 ரன்களும் எடுத்தனர்.
அதிரடியாக ரன்கள் சேர்த்த லியான் லிவிங் ஸ்டோன் 41 ரன்கள் எடுத்தார். ஜோ ரூட் 69 ரன்களில் வெளியேற 49.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 304 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி வீரர்கள் களம் இறங்கியுள்ளனர்.
இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 10 ஓவர்கள் வீசி 35 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
