ஜனவரியில் அரையாண்டு தேர்வு!

பொதுவாகத் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் தொடங்கப்படும். அதேபோல இந்தாண்டும் வருகின்ற டிசம்பர் 16ம் தேதி திங்கள் கிழமை அரையாண்டு தேர்வுகள் தொடங்குகின்றன. தொடர்ச்சியாக நடைபெறும் தேர்வுகள் டிசம்பர் 24ம் தேதிவரை நடைபெறுகின்றது. இதனால் அரையாண்டு தேர்விற்கான மாணவர்களை வேகமாகத் தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

அரையாண்டு தேர்வு நெருங்கும் நிலையில், வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக, வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது. கடும் மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலுர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாகக் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக விடுமுறை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அரையாண்டு தேர்வு தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “
வெள்ளம் பாதித்த பகுதிகளில் டிசம்பர் ஒன்பதாம் தேதிக்குள் நிலைமை சீரடையாவிட்டால், அந்தப் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ஜனவரி முதல் வாரத்தில் எழுதுவதற்கு அறிவுறுத்தி இருக்கிறோம். இதுகுறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்வார்கள். டிசம்பர் 2ஆம் தேதி தொடங்க இருந்த செய்முறை தேர்வு வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் ஜனவரி முதல் வாரத்தில் நடத்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *