தேசிய விண்வெளி நாள் விழாவில் இஸ்ரோ தலைவர் நாராயணன் புகழாரம்!!

தொலைநோக்குப் பார்வையுடன் விண்வெளித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான வழிகாட்டுதல்களைப் பிரதமர் நரேந்திர மோடி வழங்கி வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

தில்லி பாரத மண்டபத்தில் தேசிய விண்வெளி நாளையொட்டி நடைபெற்ற விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் நாராயணன், மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் சிதேந்திர சிங், விண்வெளிக்குச் சென்று திரும்பிய சுபான்சு சுக்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், தொலைநோக்குப் பார்வையுள்ள நம் பிரதமர் நரேந்திர மோடி, விண்வெளித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு வழிகாட்டுதல்களை வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.

நம் ராக்கெட் மூலமாக ஆட்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்துக்கு முன்னோட்டமாகவே சுபான்சு சுக்லாவை அமெரிக்க விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பியதாக நாராயணன் குறிப்பிட்டார்.

பிரதமரின் வழிகாட்டலில் சந்திரயான்4 திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாகவும், வெள்ளிக்கு ஒரு விண்கலத்தை அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்தார். 2035ஆம் ஆண்டுக்குள் இந்தியாவுக்குச் சொந்தமான விண்வெளி நிலையத்தை அமைக்க உள்ளதாகவும் நாராயணன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *