குரூப் கேப்டன் சுபான்சு சுக்லா, திரௌபதி முர்முடன் சந்திப்பு..!

Advertisements

அமெரிக்க விண்கலத்தில் பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்குச் சென்று திரும்பிய இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்சு சுக்லா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

இந்திய விமானப்படை குரூப் கேப்டன் அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பு அனுப்பிய ஆக்சியம் 4 விண்கலத்தில் பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினார்.

அதன்பின் புவிக்குத் திரும்பிய அவர் தில்லிக்கு வந்தார். தில்லி விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ஜித்தேந்திர பிரசாத் அவரை வரவேற்றார்.

இந்நிலையில் சுபான்சு சுக்லா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மை அவரின் மாளிகைக்குச் சென்று சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *