ajithAjit Pawar | முற்றிலும் எரிந்த விமானம்..அஜித் பவார் விபத்தில் நடந்தது என்ன.?

Advertisements

மகாராஷ்டிரா மாநிலத்தில் 8-வது துணை முதல்வராக இருந்தவர் அஜித் பவார். இன்று 10 மணி அளவில் இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சிறிய விமானம் மூலம் பாராமதிக்கு புறப்பட்டுச் சென்றார்.

இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விமானத்தில் அஜித் பவாருடன் சென்ற 6 பேரும் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

பாராமதி விமான ஓடுதளம் என்பது மிகச்சிறியது. அதில் தரையிறங்கும்போது, விமானம் விபத்துக்குள்ளாயிருக்கிறது. மும்பையிலிருந்து 8 மணிக்கு அஜித்பவார் புறப்பட்ட நிலையில், 9.12 மணி அளவில் விபத்து நடைபெற்றுள்ளது.

விமானமானது முற்றிலுமாக எரிந்து தீக்கிரையாகியிருப்பதை பார்க்க முடிகிறது. அஜித்பவார் பயணித்த விமானமானது டெல்லியை தளமாகக் கொண்ட சார்ட்டர் நிறுவனமான VSR-க்கு சொந்தமான லியர்ஜெட் 45 என்று தெரியவந்துள்ளது.

பாராமதி விமான ஓடுதளத்தில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்ததால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விமானம் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *