இந்தியா – பிரிட்டன் இடையே மெகா வர்த்தக ஒப்பந்தம் : பியூஸ் கோயல்.!

Advertisements

இந்தியா – பிரிட்டன் இடையேயான பொருளாதார மற்றும் இருதரப்பு வணிக முன்னுரிமைகளை மேம்படுத்துதல் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே சிறந்ததொரு கலந்துரையாடலை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஸ் கோயல், இந்தியா – பிரிட்டன் வர்த்தக மேம்பாட்டு பேச்சுவார்த்தைக் குறித்து  தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில், தனது நண்பரும், பிரிட்டனின் வர்த்தக மற்றும் வணிகத்துறை அமைச்சர் பீட்டர் கைல்  மற்றும் அவரது குழுவினரை இந்தியாவிற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார்.
இந்தியா – பிரிட்டன் இடையேயான பொருளாதார ஈடுபாட்டின் அடுத்த கட்டத்தை உருவாக்குதல், இருதரப்பு வணிக முன்னுரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் தங்களது வலுவான, எதிர்கால நோக்குடைய கூட்டாண்மையை மேலும் பலப்படுத்துவது குறித்து சிறந்ததொரு கலந்துரையாடலை மேற்கொண்டதாகக் கூறினார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *