மோடி மைதானத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சதம் விளாசிய சுப்மன் கில்!

Advertisements

இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் களம் இறங்கினர்.

ரோகித் சர்மா ஒரு ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து சுப்மன் கில்லுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது.

அரைசதம் அடித்த விராட் கோலி 55 பந்தில 52 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

ஆனால் அரைசதம் அடித்த சுப்மன் கில் அதைச் சிறப்பான வகையில் சதமாக மாற்றினார்.

51 பந்தில் அரைசதம் சதம் அடித்த சுப்மன் கில் 95 பந்தில் 14 பவுண்டரி, 2 சிக்சருடன் சதம் அடித்தார்.

தொடர்ந்து விளையாடிய அவர் 102 பந்தில் 14 பவுண்டரி, 3 சிக்சருடன் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இவர் ஏற்கனவே இந்த மைதானத்தில் ஐபிஎல் போட்டியில் சதம் விளாசியுள்ளார்.

மேலும இந்திய அணிக்காக டெஸ்ட், டி20 போட்டிகளில் ஏற்கனவே சதம் விளாசியுள்ளார்.

தற்போது ஒருநாள் போட்டியிலும் சதம் அடித்துள்ளார்.

இதன் மூலம் ஒரே மைதானத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *