“புதிய உயரத்திற்குச் செல்லும் இந்திய-ஆர்மீனிய உறவுகள்” – பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

இந்திய-ஆர்மீனிய உறவுகளைப் புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்ல இரு நாடுகளும் இணைந்து நெருக்கமாகச் செயல்பட எதிர்நோக்கியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, ஆர்மீனியப் பிரதமர் நிகோல் பாஷினியனுடன் தொலைப்பேசியில் பேசியது குறித்துத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சமீபத்தில் ஆர்மீனியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவரும் அவரது கட்சியும் பெற்ற வெற்றிக்காக தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட சமீபத்திய முன்னேற்றங்களைத் தொடர்ந்து, ஈரானில் தவித்துக் கொண்டிருந்த இந்தியக் குடிமக்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கு உதவியதற்காக அவருக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.
வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் இரு நாட்டு மக்களுக்கு இடையிலான உறவுகள் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் தங்களது சுமுகமான மற்றும் பன்முகத் தன்மையுடைய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் இருதரப்பு உறுதியை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார். இந்திய-ஆர்மீனிய உறவுகளைப் புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்ல இரு நாடுகளும் இணைந்து நெருக்கமாகச் செயல்பட எதிர்நோக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *