300 புதிய பேருந்துகளைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!

தமிழ்நாட்டில் வாங்கப்பட்ட 300 புதிய டீசல் மற்றும் சி.என்.ஜி. பேருந்துகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் உள்ள 8 அரசு போக்குவரத்துக் கழகங்களில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தை தவிர மீதமுள்ள சென்னை, விழுப்புரம், கும்பக்கோணம், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கி வரும் போக்குவரத்துக் கழகங்களுக்காக தமிழக அரசு 300 புதிய டீசல் மற்றும் சி.என்.ஜி. பஸ்களை வாங்கி உள்ளது.

 

இதைத்தொடர்ந்து, தமிழக முதல்-அமைச்சர் விஜய் இன்று காலை 10 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து 300 புதிய பஸ்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாநிலம் முழுவதும் பொதுப் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய பேருந்துகள் இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *