Advertisements

திருச்செந்தூர் தொகுதியின் செல்வாக்கு மிக்க தலைவராகவும், முன்னாள் அமைச்சராகவும் தமிழ்நாட்டு அரசியலில் தனித்த அடையாளம் பெற்று விளங்கிய அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை விமர்சனம் செய்து சிக்கலில் சிக்கியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆத்தூரில் முத்தமிழ் அறிஞர், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 108-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது தமிழக முதல்வர் விஜய் பற்றி ஒருமையிலும், அவதூறாகவும் பேசியுள்ளார். அது என்ன பேச்சு என்பதை பார்க்கலாம்.
தமிழக முதலமைச்சர் விஜய் எப்போது பார்த்தாலும் சட்டமன்றத்தில் சொங்கியாவும், முகத்தை உம்மு வைத்துக்கொள்வதாகவும், எதிர் தரப்பினர் பேச ஆரம்பித்த சில நிமிடங்களிலே முதல்வர் விஜய் தலை தொங்கிவிடுவதாகவும் காட்டமாக சாடியுள்ளார்.
இது பத்தாததுனு சட்டமன்றத்தில் முன்னாள் டிரான்ஸ்போர்ட் மினிஸ்டர் சிவசங்கர் பேச்சைக் கேட்டு தவெக எதிரிகள் கை கால் உதற ஆரம்பிட்டாங்க என்றெல்லாம் பேசியிருக்கிறார்.
கவர்னர் உரை, மேகதாது அணை தீர்மானம் தொடர்பாக திமுக எழுப்பிய கேள்விக்கு இந்த பாடு என்றால் பட்ஜெட் தொடர் வருகின்றபோது ஒவ்வொருத்தரும் துண்ட காணம் துணி காணனோம் என்று ஓடப்போறாங்களாம் என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
சட்டமன்றத்தில் நாகர்கோவில் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் அவர்கள் பேசும்போது முதல்வர் விஜய் முகத்தை நேருக்கு நேர் பார்த்து கை நீட்டி வாய் திறந்கு பேச மாட்டியா முதலமைச்சரே என்று கேட்டதாக சொல்லிருககாப்புல
சட்டமன்றத்தில் நாகர்கோவில் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் அவர்கள் பேசும்போது முதல்வர் விஜய் முகத்தை நேருக்கு நேர் பார்த்து கை நீட்டி வாய் திறந்கு பேச மாட்டியா முதலமைச்சரே என்று கேட்டதாக சொல்லிருககாப்புல
இவர்லாம் இப்படி கேக்கற அளவுக்கு நாம் இப்படி வந்து மாட்டிகிட்டோமே நாம பாட்டுக்கு நடிககையோட ஜாலியா இருந்தோமே என்று திரிஷாவையல்லாம் வம்பிக்கிழுத்து சர்ச்சையில் அனிதா ராதாகிருஷ்ணன் சிக்கிக்கொண்டார். ஒரு கடையில் பொருள் வாங்க வரவன் கையில காசவோட வரானா அல்லது கடன் சொல்ல போறனாகிறத அவன் பாத்தாலே கடக்காரனுக்கு தெரிஞ்சுரும் மா அப்படி முதலவர் அரசியல் ஆட்சிக்கு எல்லாம் சரிபட்டு வரமாட்டாறு என்று வன்மையாக முதல்வர் விஜயை கடினச்சொல்லால் சித்தரித்திருக்கிறார்.
இவர் பத்த வச்ச நெருப்பு அணையரதுக்குள்ள மறுபடியும் செய்தியாளர் சந்திப்பில் தமிழக முதல்வர் விஜய் வன்மையாக வஞ்சித்திருக்கிறார். அது என்னன்னா சட்டமன்றத்தில் உதயநிதி அப்பாவை காணோம் என்றெல்லாம் குட்டிக்கதை பேசும் முதல்வரே, நீங்கள் இன்னும் கூடிய விரைவில் கானாமல் போகப் போகிறீர்கள் என்று தன் உள் வஞ்சகத்தை வெளிபடுத்தியிருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். இதனையடுத்து தி.மு.க முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது காவல்துறையினர் மரியாதை குறைவாக அவதூறு பரப்பும் வகையில் பேசியது, மோதலை தூண்டும் வகையில் பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் என 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனால் பாவம் அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது துண்ட காணம் தூங்கும்போது மணிய கானோம் என்ற பாடல் வரிகளைப்போல அலறுபோறது மட்டுமல்ல காவல் நிலையத்தில் கலி திண்ணும் காலம் வறபோகிறது.
Advertisements


