சுதந்திர தினத்தையொட்டி தொடர் விடுமுறை.. நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

Advertisements

சுதந்திர தினத்தையொட்டி தொடர் விடுமுறை வருவதால், வெளியூர் செல்பவர்கள் வசதிக்காக தமிழக அரசு கூடுதலாக சுமார்  2 ஆயிரத்து 500 பேருந்துகளை இயக்கவுள்ளது.

நாளை முதல் சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்திலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் திரும்பி வர ஏதுவாக, தேவைக்கு ஏற்ப ஞாயிற்றுக்கிழமை கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

கூட்ட நெரிசலை தவிர்க்க இணையதளம் மற்றும் செயலியில் பயணிகள் முன்பதிவு செய்யவும்  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *