மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..!

Advertisements

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் 23 -ந்தேதி நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார்.

இதனை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டில் இன்று முதல் 23-ந்தேதி வரை, 3 நாட்கள் டிரோன்கள் பறக்க வரை தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே, பிரதமர் வருகையையொட்டி கிண்டி, மீனம்பாக்கம் ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு டிரோன்கள், ஆளில்லா விமானங்கள், ஹீலியம் பலூன்கள் உள்ளிட்டவை பறக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *