
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் பணம் பெற்றுக் கொண்டு தகுதியற்றவர்களைப் பணியில் அமர்த்தி 888 கோடி மோசடி நடந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு 2,538 பேரிடம் ஒரு காலிப் பணியிடத்திற்கு 35 இலட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக் கொண்டு திமுக அரசு பணியமர்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இரு மாதங்களுக்கு முன் முதலமைச்சரால் பணியாணை வழங்கப்பட்ட பணித்தேர்விலேயே இத்தகைய முறைகேடு நடந்திருக்கும் நிலையில், கடந்த நான்கரை ஆண்டுகளில் இது போன்ற எத்தனை மோசடிகள் நடந்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுக அரசின் ஊழல் மோகத்தை அடக்க சிபிஐ விசாரணை வேண்டும் என்று நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.




