
கள்ளகாதலி கூட யார் உல்லாசமாக இருப்பது என்பதில் போட்டா போட்டியால் தனது கூட்டாளியைக் கழுத்து அறுத்துக் கொலை செய்த நபரைப் போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் வயது 55. இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் குடும்பத்தை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. இவர் தற்போது வேளாங்கண்ணி அருகே பரவையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராகப் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் இவர் கருவேலங்கடை மகா காளியம்மன் கோவில் முன்பாகக் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள். வேளாங்கண்ணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி நாகை அரசுத் தலைமை மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுனர்கள் வரவழைக்கப்பட்டு கொலை நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும் இந்தக் கொலை சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டதில் ரவிச்சந்திரனின் போதை கூட்டாளியான தெற்கு பொய்கைநல்லூர் வடக்கு தெருவைச் சேரந்த நடவண்டி மோகன் என்கின்ற மகேஸ்வரனும் கொலை செய்யப்பட்ட ரவிச்சந்திரனும் பகலில் ஒன்றாகச் சுற்றித் திரிந்தது தெரியவந்தது.
மேலும் ரவிச்சந்திரன் தனது வீட்டிற்கும் மகேஸ்வரனை அழைத்துச் சென்றது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்தச் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் மகேஸ்வரனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்க்கொண்டனர்.
விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணோடு இருவரும் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளனர். ஒருக்கட்டத்தில் கள்ளக்காதலி கூட யார் இருப்பது என்ற போட்டா போட்டி இருவருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனையில் மகேஸ்வரன் ரவிச்சந்திரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.
இதற்காக ரவிச்சந்திரனோடு பகல் பொழுதில் ஒன்றாகச் சுற்றித் திரிந்து இரவில் சரக்கு வாங்கி கொடுத்து மற்றொரு போதை கூட்டாளியோடு சேர்ந்து கழுத்தை அறுத்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கொலை செய்த மகேஸ்வரனையும் கொலைக்கு உடந்தையாக இருந்த கருவேலங்கடை பகுதியைச் சேர்ந்த ஞானபிராகசம் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாகையில் கள்ளக்காதலியோடு யார் இருப்பது என்ற போட்டியில் கோவில் வாசலில் கூட்டாளியைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


