Nagarkovil : மகனைத் தேடிச் சென்ற தந்தையை அடித்துக் கொன்ற 4 பேர் கைது.!

நாகர்கோவிலில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் மகனைத் தேடிச் சென்ற தந்தையை அடித்துக் கொன்ற 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சரலூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் மகன் நவீன் வெளிநாட்டு வேலைக்காக உறவினர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளார். இதனால் உறவினர்களுடன் இவர்களுக்குத் தகராறு இருந்துள்ளது.

இந்நிலையில் இரவில் வெளியே சென்ற நவீன், நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. நவீனைத் தேடிச் சென்ற ராஜ்குமாருக்கு உறவினர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த அக்கும்பல் ராஜ்குமாரைப் பிடித்துத் தள்ளியதில் அவர் கால்வாயில் விழுந்துள்ளார். காயம் அடைந்த ராஜ்குமார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினர் நான்கு பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்ற

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *