
ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தில் அரசு மதுபான கடையில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் செக்கார மேடு பகுதியில் அரசு மதுபான கடை (எண்: 7142) செயல்பட்டு வருகிறது. மேலும் இந்தக் கடையில் இரவு 10 மணிக்கு வழக்கம்போல் விற்பனையாளர்கள் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்ட பணத்தையும் எடுத்துச் செல்வது வழக்கம்.
அதேபோல் நேற்று இரவுக் கடையை முடித்தபின்பு பூட்டிவிட்டு விற்பனையாளர் பெரியசாமி (45) சென்றுள்ளார். இதை அறிந்த அங்குள்ள மர்ம நபர்கள் மதுபான கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் கடையில் இருந்த 49 பீர் பாட்டில்களையும் ஒரு பெட்டி பிராந்தி பாட்டல்களும் மேலும் மதுபான கடையில் வைக்கப்பட்டுள்ள சிசிடி கேமராவையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து அவ்வழியாகச் சென்ற பொது மக்கள் பாட்டில்கள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து ஆத்தூர் ஊரக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

