தமிழ்நாடு சட்டமன்றத்தின் கூட்டத் தொடர் வரும் 14ஆம் நாள் தொடக்கம்.!

தமிழ்நாடு சட்டமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடர் அக்டோபர் 14ஆம் நாள் தொடங்கும் என்று சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்துள்ளது.தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அக்டோபர் 14ஆம் நாள் தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாகப் பேரவைத் தலைவர் அப்பாவு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, முதல் நாள் கூட்டத்தில் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கும், வால்பாறைச் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி மறைவுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார். அதன்பின் நடப்பு நிதியாண்டுக்கான கூடுதல் செலவினத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்துச் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யும் என்றும் அப்பாவு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *