
புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் பிரதமராக யார் முன் நிறுத்தப்படுவார்? காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கேவா? அல்லது ராகுல் காந்தியா? என்ற கேள்விக்கு ராகுல் பதிலளித்தார்.
இந்தியா கூட்டணியின் முக்கிய கட்சி யான் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று டெல்லியில் வெளியிடப்பட்டது. அந்த தேர்தல் அறிக்கையில் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் நட்சத்திர தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கைகளை உயர்த்தி காட்டுவது போன்ற படங்கள் இடம்பெற்றுள்ளன.
இதன் காரணமாக இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர்களாக அவர்கள் இருவரின் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்று பேச்சு எழந்தது. தேர்தல் அறிக்கை வெளியிட்டபின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது இது குறித்து ராகுல் காந்தியிடம் கேட்கப்பட்டது.
“கடந்த 2009 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் சோனியா காந்தி மன்மோகன் சிங் ஆகியோரின் படங்கள் இடம் பெற்றிருந்தன. அப்போது யார் பிரதமர் வேட்பாளர் என எனக் கேட்கப்பட்டது. உடனே சோனியா காந்தி இருவர் படங்களில் தனது படத்தை மறைத்து காண்பித்தார். இந்த முறை உங்கள் இருவர் முகங்களில் யாருடைய முகத்தை மறைக்க போகிறீர்கள்? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதாவது இருவரில் யார் பிரதமர் வேட்பாளர் என்று நேரடியாக கேட்பதற்கு பதிலாக கடந்த முறை சோனியாவிடம் கேட்டது போல் சுற்றி வளைத்து கேட்டனர். அதற்கு உடனடியாக பதில் அளித்த ராகுல் காந்தி , ” சித்தாந்த அடிப்படையில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஒன்று பட்டு போராடுவது என்ற முடிவின் அடிப்படையில் போட்டியிடுகிறோம். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கூட்டணி கட்சித் தலைவர்கள் யார் பிரதமர் என்பதை முடிவு செய்வார்கள்” என்று பதிலளித்தார்.
பாஜகவின் ரகசியசர்வேயில் பின்னடைவுஇதற்கிடையில் பாஜக மேலிடம் சார்பில் சமீபத்தில் ரகசியமாக நடைபெற்ற சர்வே ஒன்றில் அந்தக் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதுவரை 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று கூறி வந்த பாஜக தலைவர்கள் தற்போது சற்று அடக்கி வாசிக்க தொடங்கியுள்ளனர்.
தென் மாநிலங்களிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜகவுக்கு பெரிய அளவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஹிந்தி பெல்ட் என அழைக்கப்படும் வட மாநிலங்களிலும் இந்த தேர்தலில் கடந்த முறை போல் பாரதிய ஜனதாவுக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்காது.
ஆட்சி அமைப்பது யார்? ஏனென்றால் உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பாஜகவுக்கு சரியான போட்டியாக அமையும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதன் காரணமாக பாஜக இந்தியா கூட்டணி இடையே இந்தத் தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும் என்றும், அதிலும் குறிப்பாக 10 அல்லது 20 தொகுதிகளில் அதிகமாக வெற்றி பெற்று இந்தியா கூட்டணி தான் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்றும் அந்த ரகசிய சர்வேயில் தெரிய வந்துள்ளது. அதன் பிறகு தான் பாஜக பிரச்சாரத்தில் தீவிரம் ஏற்பட்டுள்ளது.


