அனுமதி கேட்காமல் எனது பாடல்வரிகளை படத்தலைப்புகளாக பயன்படுத்தியதாக கவிஞர் வைரமுத்து வருத்தம் தெரிவித்தார்.
இது தொடபாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தன்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். அப்படி தலைப்பை உபயோதித்தவர்கள் யாரும் தன்னிடம் அனுமதி பெறவில்லை என கூறினார்.
மேலும் படத்தின் பெயரை பட்டியலிட்டு கூறினார். இதற்காக இவரைகளை கடிந்து கொள்ளவில்லை என்றும், இது பற்றி கேட்பது நாகரிகமாகாது எனவும் தெரிவித்தார்.
என்னை கேட்டுவிட்டு பயன்படுத்துவதான நாகரிகம் என சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ளளார்.


