
குதிரையேற்றம் போட்டியில் வெண்கலம்.
ஆசிய விளையாட்டு போட்டியில் குதிரையேற்றம் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்துள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டி தொடரின் குதிரையேற்றம் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்துள்ளது. தனிநபர் (dressage) போட்டியில் இந்தியாவின் அனுஷ் அகர்வல்லா வெண்கல பதக்கத்தைத் தனதாக்கினார்.
நடப்பு ஆசிய விளையாட்டு தொடரில் குதிரையேற்றம் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்து இருக்கும் 2-வது பதக்கம் இதுவாகும். அனுஷ் அகர்வல்லா 73.030 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்தார். மலேசியாவின் முகம்மது குபில் அம்பாங் 75.780 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கமும், ஹாங்காங்கின் ஜாகுலின் விங் யிங் 73.450 புள்ளிகள் பெற்று தங்கமும் வென்றனர்.
டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் மாலத்தீவின் முகமது சஃபான் இஸ்மாயிலை முதல் சுற்றில் விழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் இந்திய வீரர் ஷரத் கமல்.
ஆசிய விளையாட்டு: ஆடவர் இரட்டையர் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் தென் கொரியாவின் சியோங்சான் ஹாங் மற்றும் சூன்வூ குவான் ஜோடியை இந்தியாவின் சாகேத் மைனேனி மற்றும் ராமநாதன் ராம்குமார் ஜோடி எதிர்த்து விளையாடியது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 6-1, 6-7(6), 10-0 என்ற செட் கணக்கில் அசத்தல் வெற்றியைப் பெற்ற இந்தியா, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதிப்போட்டியில் தாய்லாந்தின் இசாரோ ப்ரச்யா- ஜோன்ஸ் மேக்சிமஸ் பரபோல் ஜோடி, இந்தியாவின் சாகேத் மைனேனி மற்றும் ராமநாதன் ராம்குமார் ஜோடியை எதிர்கொள்கிறது. முன்னதாக மற்றொரு அரையிறுதி போட்டியில் சீனாவை 6-4, 7-6 (5) என்ற செட் கணக்கில் வென்று இசாரோ ப்ரச்யா- ஜோன்ஸ் மேக்சிமஸ் பரபோல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
தங்க பதக்கத்திற்கான போட்டியில் நாளைத் தாய்லாந்தும் இந்தியாவும் பலப்பரிட்சை நடத்துகின்றன. இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கு வெள்ளி அல்லது தங்கம் என இரண்டில் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.
ஆசிய விளையாட்டு தொடரில் இந்திய அணி தொடர்ந்து பதக்க வேட்டையை நடத்தி வருகிறது. இந்திய அணி தற்போது வரை 25 பதக்கங்களுடன் பட்டியலில் 5 ஆம் இடத்தில் உள்ளது. பதக்க பட்டியலின் விவரம் வருமாறு சீனா : 85 தங்கம், 49 வெள்ளி பதக்கம், 26 வெண்கலம்- மொத்த பதக்கங்கள்;160 தென்கொரியா: 21 தங்கம், 20 வெள்ளி, 38வெண்கலம்: மொத்த பதக்கங்கள்; 79ஜப்பான்: 18 தங்கம், 29 வெள்ளி, 27 வெண்கலம்- மொத்த பதக்கங்கள்: 74
உஸ்பெஸ்கிஸ்தான்: தங்கம் 6, வெள்ளி 10, வெண்கலம் 11- மொத்த பதக்கங்கள் :31 இந்தியா: தங்கம் 6, வெள்ளி 8, வெண்கலம் 11- மொத்த பதக்கங்கள்: 25



